திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரில் திமுக 13 வது வட்ட கிளை கழக செயலாளர் எல்ஆர்எஸ். சண்முகம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 பிறந்தநாளை முன்னிட்டு, லால்குடி நகர செயலாளர் துரைமாணிக்கம் கட்சி கொடியேற்றினார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.