திருச்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும், கழிவுநீர் தேங்கி நிற்பது உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் அபராதம் விதிக்க மாட்டோம் பூட்டி சீல் வைக்கப்படும் என மேயர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் சில்லரை வியாபரத்திற்க்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் மட்டும் தான் மீன் கடைகள் செயல்பட வேண்டும், வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கினார்…இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உடன் இருந்தனர். .