தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. நோய்த் தொற்று கட்டுக்குள் வராததால் மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ” கொரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலத்தில் விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம்..ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.. தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு வந்துள்ளது.. முழு ஊரடங்கின் போது தொற்று குறைந்துள்ளதே தவிர, கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.இதே போல் இந்த கூட்டத்தில் கலந்து மற்ற கட்சி எம்.எல்..ஏக்களும் ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். எனவே தமிழகத்தில் இன்னும் 14 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது..எனவே 2 வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதகவும், முதல் ஒரு வாரத்திற்கு எந்த தளர்வும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.. நாளை ஒரு நாள் தளர்வுகள் அறிவித்து விட்டு, மே 24- முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற தீவிர ஊரடங்கு அமல்ப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக உள்ளது..பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நாளை வாங்கி வைத்து கொள்ள அறிவுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.. நடமாடு வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.. பால், மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளையும் மூட அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது..