டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரம் படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படையாக ஏபிசி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொழிற்சங்க முன்னணி ஊழியர்களை இடமாற்றம், பழி வாங்கும் முறையை கைவிட வேண்டும்.
உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தும் பார்களை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றிய மாநில தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் அருள்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.