திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவியர் என சுமார் 539 பேர் கல்வி பயின்று வருகின்றனர். அதில் 258 மாணவர்களும், 281 மாணவிகளும் தற்போது கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 14 ஆசிரியைகள், 8 ஆசிரியர்கள் என மொத்தம் 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் சிலர் பள்ளி வகுப்பறையில் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு பேசுவதும், பெண் ஆசிரியை முன்னிலையில் மேலாடையின்றி ஆசிரியரிடம் பேசுவது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பரவி வந்துள்ளது. இதை கண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறுகையில் மாணவர்கள் முன்னிலையில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆசிரியை ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஆசிரியர்கள் இருப்பது போன்று தவறான கண்ணோட்டத்தில் சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் விடப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அங்கு ஆய்வுக்கு வந்த முசிறி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட நீதிபதி தமாக முன்வந்து இது சம்பந்தமாக சைபர் கிரைம் இடம் தகவல் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் சிலர் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த புகைப்படங்கள் குறித்த உண்மை தன்மை என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருவது மாணவர்களின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது