தேசிய அளவிலான சிலம்பம் போட்டி இன்று காலை திருச்சி தில்லைநகர் உள்ள தனியார் பள்ளியில் துவங்கியது. போட்டியை ராமகிருஷ்ண தபோவன செயலாளர் சத்யானந்தா சுவாமிகள், ஜி.விஎன்.மருத்துவமனை இயக்குனர் ஜெயபால் ஆகியோர் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் திருச்சி, சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் மழலையர், ஜீனியர் சப், ஜூனியர், சீனியர், உள்ளிட்ட பிரிவுகளில் 6 வயது முதல் 30 வரையிலான் வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.
போட்டிகள் குத்து வரிசை, நெடும் கொம்பு வீச்சு, நடு கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு மற்றும் கம்பு சண்டை தொடும் முறை ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெறும் முதல் நான்கு வீரர் – வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
இதில் மலேசியா சிலம்ப சங்கத்தின் நிறுவன தலைவர் முனைவர் அன்பழகன், மலேசியா சிலம்ப சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குனர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இந்திய கொறவை சிலம்பு சங்கத்தின் மாநில தலைவர் மோகன் செய்திருந்தார். இன்று நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலக அளவில் நடைபெற உள்ள சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.