அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனியாக கட்சி அலுவலகம் திறந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்கள். பகுதி வாரியாக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக 6 பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக காந்தி மார்க்கெப் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுதி செயலாளர் டி.சுரேஷ்குப்தா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு அவை தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் எம்பி ரத்தினவேல் உரையாற்றினார். கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும். கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி திமுக அரசுக்கு துணைபோகும் கூட்டத்தை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், துணைச்செயலாளர் வனிதா,பொதுக்குழு உறுப்பினர்கள வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், பாலக்கரை சதர், மாவட்ட அணி நிர்வாகிகள் எம். ராஜேந்திரன், எம்.எஸ்.ராஜேந்திரன், கருமண்டபம் நடராஜன், தென்னூர் அப்பாஸ், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, என்.எஸ்.பூபதி, ஏர்போர்ட் விஜி, கலைவாணன், தலைமை கழக பேச்சாளர் ஆரி, பேரவை துணைத் தலைவர் ராஜசேகர், உள்பட பலர் கலந்துகொண்டனர்.