திருச்சி உறையூர் பகுதியில் உள்ள நாராயணா NEET/IIT/JEE பயிற்சி நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் Dr.வெங்கட் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்தியாவில் கடந்த 43 வருடங்களாக 650 க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களையும் பயிற்சி கூடங்களையும் 23 மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடத்தி சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவினை நினைவாக்கிட மிக சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கிக் கொண்டு வரும் நிறுவனம் தான் டாக்டர். நாராயணன் IIT/ JEE/NEET பவுண்டேஷன் ஆகும்.
மேலும் மிக சிறந்த அனுபவம் கொண்ட ஆசிரியர்களை கொண்ட எங்களது பயிற்சி மையத்தின் மூலமாக( மெட்ரிக்/ சி.பி.எஸ்.சி) எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு JEE மற்றும் NEET பயிற்சிக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது +1 மற்றும் +2 மாணவர்களுக்கு ஒரு வருடம் மற்றும் இரு வருட பயிற்சி வகுப்புகளும் மிகச்சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்திய அரசால் வருகிற ஜூலை 17-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ள நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உந்து சக்தியாகவும் அவர்களின் தேர்வு பயத்தினையும், ஐயப்பாட்டினையும் போக்கி மன உறுதியை மேம்படுத்தி நல்ல முறையில் நீட் தேர்வினை எதிர்கொள்ள எங்களது நாராயணா நிறுவனத்தின் மூலம் ஜூலை 7 மற்றும் 12ம் தேதிகளில் தமிழ் நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் பயின்று வரும் அனைத்து தரப்பு மாணவர்களும் மேற்படி மாதிரி இனணயதள தேர்வில் கலந்து கொண்டு அதிக இணையதளம் மூலமாக மாதிரி தேர்வினை நடத்தி தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் அதிகமான எண்ணிக்கையில் மிக சிறந்த மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி அடைய எங்களது நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இனையதள மாதிரி நீட் தேர்வு துணை புரியும் என்பதனை மிகவும் மகிழ்ச்சி உடன் தெரிவித்துக் கொள்கின்றேன் பயிற்சி மையங்களில் பயின்று வரும் மாணவர்கள் ஆனாலும் சொந்தமாக தயார் செய்து கொள்பவர்களாக இருந்தாலும் எங்களது மாதிரி இணையதள தேர்வில் கலந்துகொண்டு தங்களை சிறந்த முறையில் தயார் செய்து கொள்ளுமாறு நாராயணா கல்வி நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.