கொரோனா காலக்கட்டத்தில் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியே வரும் நபர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து சென்னை, தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் கூறியுள்ளதாவது:-ஊரடங்கை மீறி வெளியே வரும் தனி நபர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் மீதும் FIR பதிவு செய்யப்படும். அரசு ஊழியர்கள், அவர்களின் வேலை நேரத்தில் பயணம் செய்தால் எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால், இரவு 10 மணிக்கு வெளியே சுற்றித் திரிந்த பின்னர் பிடிபட்டால், தாங்கள் அரசு ஊழியர் என்று சொல்லித் தப்பிக்க முடியாது.எங்கு என்றாலும் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். இப்படிச் செய்வதன் மூலம் நீதிமன்றம் உங்களுக்கு சிறைத் தண்டனை கூட கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, தேவையில்லாமல் வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்து கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.