திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக 58,44,3,252 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49இடங்களில் சோதனை. அவரது மகன்கள் இனியன், இன்பம் ஆகியோர் வீடுகளிலும் அதிகாரிகளை சோதனை மேற் கொண்டு வருகின்றனர். சென்னை, திருவாரூர், மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்திருச்சியில் கே.கே.நகர் பகுதியில் ஐயர் தோட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நட்சத்திர விடுதியிலும் மேலும் திருச்சி தில்லை நகர் பகுதியில் ராமச்சந்திரன் நகரில் இளமுருகு என்பவரது ரோகிணி அடுக்குமாடி கட்டிடத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.