மேட்டூர் அணையிலிருந்து இரண்டாவது நாளாக ஒரு இலட்சத்து 32 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட முக்கொம்பூர் மேலணைக்கு வந்துகொண்டிருப்பதை முன்னிட்டு , முக்கொம்பூர் காவிரியாற்றில் 47,874 கன அடியும் , கொள்ளிடம் ஆற்றில் 65,639 கன அடியும் , பாசன வாய்க்காலில் ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் காவேரி ஆறு மற்றும் கொள்ளிட ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளார், மேலும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால். பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் திருவழர்சோலை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை உள்ளிட்ட வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அதேபோல் மேலும் அப்பகுதியில் உள்ள செங்கற் சூளை உள்ளிட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.