திருச்சி திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக விளங்குகிறது – இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை சுற்றி எப்போதும் நீர் ஊற்று எடுத்துக் கொண்டே இருப்பது சிறப்பு மிக்க ஒன்றாகும் – அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி திருவானைக்காவலில் ஆலயத்தில் உள்ளது.
காலையில் மகாலட்சுமி யாகவும், மதியத்தில் துர்க்கையாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் இந்த அம்மன் காட்சி தருகிறார் – இந்நிலையில் இன்று ஆடி மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை மதுரை சேலம் அரியலூர் பெரம்பலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மை தரிசனம் செய்ய வருடம் தோறும் ஆடி மாதங்களில் பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.