அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் Dr.அப்சல் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக கருப்பு பேட்ச் அணிந்து கண்டன வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டம் கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் பிரசன்ன கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பதவி உயர்வில் ரயில்வே வாரியம் வழங்கிய உத்தரவை மற்ற மண்டலங்களில் நடைமுறைப்படுத்தியது போல முறையாக இங்கேயும் அமல்படுத்திடக் கோரியும், ஓ பி சி நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் பழிவாங்கும் போக்கை கைவிடக் கோரியும்,
ஓ பி சி கோட்ட நிர்வாகிகளின் பணியிட மாற்றம் மற்றும் தொழிலாளர்களின் பதவி உயர்வை காலம் தாழ்த்தாமல் குறித்த நேரத்தில் செயல்படுத்திடக் கோரியும், பதவி உயர்வுக்கான தேர்வு வகுப்புகள் ஓபிசி ஊழியர்களுக்கும் வழங்கிட கோரியும், ரயில்வே ஆக்ட் அப்ரண்டீஸில் தேர்வான மாணவர்களுக்கு உடனே பணி நியமனம் செய்ய கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வினை சகாய விஜய் ஆனந்த் கோட்ட தொழிலாளர் நல நிதியுதவி கமிட்டி உறுப்பினர் அவர்கள் ஒருங்கிணைத்தார் இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ரயில்வே தொழிலாளிகள் கலந்து கொண்டனர்.