தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலையேற்றம் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். தேனீர், காபி உள்ளிட்ட பால் சார்ந்த உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கும். எனவே தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான இந்த பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைப்படுத்தி பால் கொள்முதல் விலை, விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை முதல் உயர்வுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.