இந்த நடை பயணம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் செய்தியாளர்களிடம் பேசுகையில்… குறிப்பாக தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும்போது 500 கைதிகளை தமிழக சிறையில் இருந்து விடுவிக்க உள்ளதாக அறிவித்தார். அதற்காக ஆதிநாதன் என்ற உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை ஆதிநாதன் குழு எங்கு உள்ளது என்பது கூட யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ரமணா விரைவில் ஓய்வு பெற போகும் நிலையில் இந்திய சிறைகளில் ஆறு லட்சத்து 10 ஆயிரம் சிறைவாசிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 80% பேர் விசாரணை கைதிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். விசாரணை கைதிகளும் பல ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் விசாரணை கைதிகளாகவே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் திரைவாசிகளின் விடுதலை குறித்து பேசிய அநேக நபர்கள் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்ற கட்சிகளின் விடுதலை குறித்து வாய் திறக்காமல் இருப்பது வேதனைக்குரியது என்றும் எனது அவர்கள் தங்களுடைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் இந்திய நீதிமன்றங்கள் அனைத்தும் சிவில் மற்றும் இருமல் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்கு இன்னும் 350 வருடங்கள் ஆகும் என்றும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். எனவே தமிழக அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று வரும் சிறை வாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்படும் நடைபயணத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.