இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய முழுவதும் கோலாகலமாக சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வண்ண பலூன்களை மற்றும் சமாதான புறாவை பறக்க விட்டார் இதனை தொடர்ந்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
அதனைதொடர்ந்து 25 ஆண்டு மாசற்ற பணியாற்றிய அலுவலர்கள் 318 நபர்களுக்கு துறைவாரியாக பாராட்டு சான்று வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகள் மூன்று வருடத்திற்கு பின்னர் இன்று ஆயுதப்படை மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது இதில் பத்திற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் பாரம்பரிய யோகா கலை மற்றும் விளையாட்ட கலையான மல்லர் கம்பம் விளையாட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், காவல்துறை திருச்சி சரக துணைத்தலைவர் சரவணன் சுந்தர்மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.