திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில் 75வது சுதந்திர தின பொதுக்கூட்டம் திருச்சி மரக்கடை அருகே இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொருளாளரும், தக்வா பள்ளி வாசல் தலைமை இமாமும்மான மெளலானா.அல்மின் யூசுபி வரவேற்பு ஆற்றிட. மாநில பொருளாளர் மெளலானா. முஹம்மது மீரான் தலைமை தாங்கினார். பொதுக்கூட்டத்தில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம். முஹம்மது சிராஜீத்தின் மன்பயீ ஷழ்ரத் துவக்கவுரை ஆற்றினார். சுதந்திர போரின் வலி மிகுந்த வரலாறுகள் என்ற தலைப்பில் தமிழ் நாடு ஜமா அத்துல் உலமா சபை துணை பொதுச்செயலாளர் மெளலானா.இல்யாஸ் ரியாஜியும், அதேபோல் கூடி பெற்ற சுதந்திரத்தை ஒன்றுபட்டு பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஜமா அத்துல் உலமா சபை தலைவர் மெளலானா முஃப்தி. முஹம்மது ரூஹூல் ஹக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

இந்த பொதுக் கூட்டத்தின் தீர்மானங்களாக:-

சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிரை தாய் நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்த வீரதிரர்களின் பெயர்களை பஸ்நிலையம், இரயில் நிலையம், மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோடுகள், அரசு கல்வி நிலையங்கள் போன்றவைகளுக்குக்கு நினைவுப் பெயராக சூட்டி அவர்களை பெருமை படுத்த வேண்டும்.

 இந்திய தேசத்திற்காக, அதன் விடுதலைக்காக தமது உடலை, பொருளை, உயிரை தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு களை எந்தவித பாரபட்சமும் இன்றி பாட புத்தகங்களில் முழுமையாக பதிவு செய்து அடுத்த தலைமுறை இந்தியர்களுக்கு முன்னோர்களின் வீர வரலாறுகள் பாடமாக, படிப்பினையாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் இஸ்லாமிய தலைவர்கள் சகோதர சமயத்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *