பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது.
இதில் விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய 9வது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை தான், கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகின்றோம்.
இந்த நாளில் நாம் கிருஷ்ணரை முழு மனதுடன் விரதம் இருந்து வேண்டினால், நம்மை காத்து அருளுவார். கிருஷ்ணரின் மிக தீவிர பக்தர்கள் உணவு, நீர் இல்லா விரதம் மேற்கொள்கின்றனர்.
இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியில் உள்ள ஸ்ரீரங்கம் பரத நாட்டியாலையா நடன பள்ளியான கலை மாமணி ரேவதி முத்துசாமி அவர்களது இல்லத்தில் கிருஷ்ணர், ராதை, கோபிகளாகவும் குழந்தை கிருஷ்ணர் வேடம் அணிந்து மாணவிகள் கோகுலாஷ்டமியான கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
அதனைத் தொடர்ந்து கலை மாமணி ரேவதி முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நம்முடைய கலாச்சாரத்தை தற்போதையுள்ள மாணவ மாணவிகளுக்கு கலைத்துறை மூலம் கிருஷ்ணர் யார் என்றும் ராமாயணம் மகாபாரதம் கீதை ஆகியவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும். கடந்த இரண்டு வருடமாக கொரோனா காலகட்டத்தில் மனரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த கோகுல அஷ்டமி விழாவை அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
தற்போது கோவிலில் மாதாமாதம் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் அறநிலை துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.