திருச்சி அரியமங்கலம் கீழ்அம்பிகாபுரம் , லூயிஸ்நகரில் உள்ள சக்தி மகளில் இயக்கத்தில் பெண்ணை துன்புறுத்தியும் , குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது . இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து குற்றவாளி டேவிட்ராஜ் வயது 54 கடந்த 25.01.2019 – ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது .
மேற்படி வழக்கில் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி மணிவாசகன் விசாரணையை முடித்து 22.08.22 – ம்தேதி , குற்றவாளி ச / பி 294 ( b ) இதச – ன்படி மூன்று மாதம் சிறைதண்டனை மற்றும் ரூ .1,000 / – அபராதமும் , ச / பி 354 இதச – ன்படி மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ .1,000 / அபராதமும் , ச / பி 506 ( i ) இதச – ன்படி ஒரு ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ .1,000 / அபராதமும் , ச / பி 4 of women Harassment இதச – ன்படி 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ .10,000 / – அபராதமும் ( ஆக மொத்தம் 7 ஆண்டுகள் 3 மாதம் சிறையும் மற்றும் ரூ .13,000 / – அபராதம் ) விதித்து தீர்ப்பு வழங்கினார்கள் . இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் விசாலாட்சி ஆஜரானார் . இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து , குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாரட்டினார் .