திருச்சி விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் தொட்டியம் பிடாரமங்கலம் கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் வண்டல் மண், களிமண், திராவல் மண் மற்றும் சவுண்டு மண் அள்ளிக் கொள்வதற்கு அப்பகுதி சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கனிமவளத்துறைக்கு பரிந்துரை செய்து கனிமவளத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஏரியில் மண் அள்ளிக் கொள்ள அனுமதி அளித்தனர். ஆனால் ஏரியில் மண் அள்ளுவதற்கு குறைந்த காலமே கனிமவளத் துறை அதிகாரிகள் தருவதால் குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகள் நினைத்த அளவிற்கு மண்ணை அள்ளிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது மேலும் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சேர்ந்த அதிகாரிகள் கனிமவளத்துறை அதிகாரிகள் கொடுத்த உத்தரவை மதிக்காமல் காரணம் இன்றி சில நாட்களில் விவசாயிகள் மண் அள்ளுவதை நிறுத்தி விட உத்தரவிடுகின்றனர்.
இதனால் மண் அள்ளுவதற்கு விவசாயிகள் அனுமதி பெற்றும் அவர்களால் தேவையான மண்ணை அள்ளிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத் தலைவரின் கணவர், ஒன்றிய குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் கணவர் என பலரும் இடையூறு செய்வதால் இத்திட்டம் முற்றிலும் வீணடிக்கப்பட்டு தமிழக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதுபோன்ற இடையூர்களை தவிர்த்து விவசாயிகள் ஏறில் முறையாக மண் அள்ளிக் கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யுமாறு அப்பகுதியை சேர்ந்த விவசாய முன்னேற்ற கழகத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு அளிக்க வந்தனர்.