அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற “புதுமைப் பெண்” திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது மேலும் 26 பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டது இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
இத்திட்டத்திற்காக மாநில அளவில் ரூ.698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 6,00,000 அரசு பள்ளிகளில் படித்த இளங்கலை, பட்டயம் மற்றும் தொழிற் பயிற்சி பயிலும் மாணவிகள் பயன்பெறுவார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தகுதியுடைய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவிகள் 6500 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 613 கல்லூரி மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N. நேரு அவர்கள் 613 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000/ பெறுவதற்கு பற்று அட்டைகளை (வங்கி Debit Card) வழங்கினார்
இதில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 477, பொறியியல் கல்லூரி மாணவிகள் 83, சட்டக் கல்லூரி மாணவிகள் 10. மருத்துவக் கல்லூரி மாணவிகள் 23 மற்றும் தொழிற்கல்வி மாணவிகள் 20 என 613 மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.