சென்னையில் கடந்த 3 மற்றும் 4 ம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிர்ச்சியாளர் பிஎச்எல் எழில் மணி அவர்களிடம் பல பள்ளி கல்லூரி மாணவர்கள் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர் அப்படி பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் கபிலன் 28 கிலோ பிரிவில் தங்கம் முகேஷ் 46 கிலோ பிரிவில் முகேஷ் வெண்கலமும் 28 கிலோ பிரிவில் சன்ஜித் 41 கிலோ பிரிவில் கபிஷ் ஆகியோர் 4 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர் மேலும் சிறந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளராக பிஎச்எல் எம். எழில் மணி தேர்தெடுக்கப்பட்டார்.
இவர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் அமைப்பின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், இணை செயலர் வழக்கறிஞர் இளையராஜா வழக்கறிஞர் ஆறுமுகம் மகளிர் பிரிவு செயலர் வழக்கறிஞர் கார்த்திகா பெல் தொலைபேசி. மு. ச. தொழிற்சங்கத்தின் நிர்வாகி மிதுன் சக்கரவர்த்தி, இளம்பருதி மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்