108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் காணிக்கைகளை திருக்கோயில் பக்தர்களின் பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்கள் கணக்கிட்டு வருகின்றனர்.
இதில் ரூ.55 லட்சத்து 9 ஆயிரத்து 921 ரூபாய் ரொக்கமும், 135 கிராம் தங்கமும்,855 கிராம் வெள்ளியும், 250-வெளிநாட்டு பணமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.