இந்து மதத்தில் மகாளயபட்சம் என்னும் பித்ருபக்ஷம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமைத் தொடங்கி அமாவாசை வரை 14நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த ஆண்டின் மகாளய பட்சம் காலம் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ம் தேதியான இன்று வரை நீடிக்கிறது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், பகவான் ராமர், தர்மர் ஆகியோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
அதன்படி இன்று நீர்நிலைப் பகுதிகளில் மகா மஹாளய அம்மாவாசை முன்னிட்டு தனது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் வருகின்றனர்.
அம்மா மண்டபம் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.