திருச்சியின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் நாய்களை பிடித்துச் செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் தெருக்களிலும் சாலைகளிலும் திரிந்து வருகிறது இன்று 16வது வார்டு உக்கடை அரியமங்கலம் பகுதியில் சுமார் 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை தெரு நாய் அவரின் கையை கடித்து கொதறியது. பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி காட்டூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் காண்பித்து ஊசி மட்டும் போட்டுக்கொண்டார். நாய் கடித்ததில் காயம் பெரிதானதால் மேல் சிகிச்சைக்காக துவாக்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த மூதாட்டி துவாக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே அப்பகுதியில் நாய்கள் தொல்லை இரவு நேரங்களில் அதிகமாக உள்ள நிலையில் தற்போது பகல் நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகளை விரட்டி விரட்டி கடிக்க தொடங்கியுள்ளது. தொடரும் நாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.