அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டாக்டர் . சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் டாக்டர்.விஸ்வநாதன் மருத்துவமனை குழுமம் சார்பில் திருச்சியில் மேமோரன 2022 என்ற தலைப்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்கான 21 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 5 கிலோமீட்டர் தூர ஓட்டம் உழவர் சேர்ந்த மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 10 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஓட்டமானது உழவர் சந்தை மைதானத்தில் துவங்கி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, கோர்ட், மாநகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தை சென்று அடைந்தது.
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த ஆண்கள் பெண்களுக்கு 25000/- முதல் பரிசும், 20000/- இரண்டாம் பரிசும், 15000/- மூன்றாம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது, பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார். அருகில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் காஜா மொய்தீன் மற்றும் ஜிவிஎன் மருத்துவமனை டாக்டர் கோவிந்தராஜன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்