கடந்த 2018 – 2021ம் ஆண்டு முதுநிலை படிப்பு காலம் முடிந்த பிறகும் முதுநிலை மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாகவே நீடிக்க செய்யும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
இந்ந போராட்டத்தின் கோரிக்கைகளாக. 1. பட்டமேற்படிப்பு காலத்தினை நீட்டிப்பு செய்திடாமல் அனைத்து அரசு சாரா பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக (SENIOR RESIDENT) / அரசு உதவி மருத்துவராக (ASSISTANT SURGEON) கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். 2.அந்தப் பணிக்காலத்தை அவர்தம் முதுநிலை குடியிருப்பு பணிக் காலத்தில் சேர்த்தும்; அதற்கேற்ப ஊதியத் தொகையும் சலுகைகளும் வழங்கிடவும் வலியுறுத்துகிறோம். 3. கொரோனா காலப் பணியை 2 வருட கட்டாய சேவைக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4. கொரோனா காலத்தில் பணி புரியும் மருத்துவர்களின் அருஞ்சேவையை கருத்தில் கொண்டு 2 வருட கட்டாய சேவைக்காலத்தை 1 வருடமாக குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 5. மேலும் இறுதியாண்டு தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தேர்வு நடத்தும் சூழல் ஏற்படுமாயின் குறைந்தது 4 வாரங்கள் முன்னதாக தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள இறுதியாண்டு அரசு சாரா பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation