துறையூர் அருகே கரட்டாம்பட்டியிலிருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை அருகே விவசாய நிலப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததன. இச்சம்பவம் குறித்து ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்சி வனத்துறை வனவர் துளசி மலை இறந்து கிடந்த மயில்களை பார்வையிட்டு இதில் 5 ஆண் மயில்கள் 15 பெண் மயில்கள் இறந்துள்ளது எனவும் சம்பவ இடத்திலேயே கால்நடை மருத்துவர் செந்தில் குமார் மயிலை உடற்கூறு ஆய்வு செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய நிலத்தில் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா! வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதா! என்பது குறித்து விசாரித்து வருகின்றனர் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.