செரிமான மண்டலத்தில் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து மறுவாழ்வு தந்துள்ளனர் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள். 62 வயது முதியவர் அடிவயிற்றில் கடுமையான வலியுடன் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் செரிமான மண்டலத்தில் இரத்தம் செலுத்தும் தமணி (SMA) ரத்தம் உறையும் சிக்கலான நிலை, மற்றும் குடல் ஒவ்வாமை என குறிக்கப்படும் குடலுக்கு ரத்தம் செல்வதில் அடைப்பு ஏற்பட்டு குடல் தசைகள் சிதையும் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பது தெரியவந்தது.
அத்துடன் அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற பல்வேறு இணை நோய்கள் இருந்துள்ளது. அதற்கான மருந்துகளை அவர் தொடர்ந்து எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். அதன் விளைவாக எத்தகைய தொற்றுக்கும் எளிதாக ஆட்படும் வாய்ப்புள்ள மிக பலவீனமான நோயாளியாக இருந்தார்.எஸ்எம்ஏ த்ராம்பஸ் நிலையில், ஒரு நோயாளிக்கு மரணத்திற்கான வாய்ப்பு60 – 70 சதவீதமாக உள்ள நிலையில், உடலில் கடும் பிரச்சினைகளைக் கொண்டுள்ள இந்த நோயாளிக்கு மரணத்திற்கான வாய்ப்பு 90 சதவீதமாக இருந்தது. குடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கியமான எஸ்எம்ஏ ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பதும், குடல் தசைகள் சிதையும் நிலையும் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மோசமான உடல்நிலை குறித்து நோயாளிக்கும், உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட்டு உரிய சிகிச்சைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.சவாலான நிலையில், Jejunostomy & laparotomy மிக முக்கியமான இரண்டு சிகிச்சைகளை லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் முகமது மன்சூர் மற்றும் வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் ஆகியோர் 21.08.22 அன்று வெற்றிகரமாகச் செய்துமுடித்தனர். அதனைத் தொடர்ந்து நோயாளி ஐசியூவில் வைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் laporotomy சிகிச்சை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஆழமான பவுத்திர மூலத்தைச் சரி செய்வதற்காக முக்கியமான அறுவை சிகிச்சை 02.09.22 அன்று செய்யப்பட்டது.
பல்வேறு இணை நோய்களுடன், மரணத்தை ஏற்படுத்தும் மோசமான பாதிப்பும் ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட செல்வராஜ் சுமார் 25 நாட்கள் தீவிர மருத்துவப் போராட்டத்திற்குப் பின்பு 13.09.22 அன்று தானே எழுந்து நிற்கும் அளவுக்கு உடல் நிலை தேறினார். இது திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ள பெரிய சாதனையாகும். லேப்ராஸ்கோபிக் மற்றும் உடல் எடை குறைப்பு நிபுணர் முகமது மன்சூர் தலைமையிலான அனுபவமிக்க மருத்துவர்கள் குழு பல்வேறு அறுவை சிகிச்சைகளை வெகுசிறப்பாக செய்துமுடித்து அந்த நோயாளியை உயிர் பிழைக்க வைத்துள்ளனர். மேலும், இதயநோய் மருத்துவர் சியாம் சுந்தர், குடலியல் நோய் மருத்துவர் முரளி ரங்கன், நுரையீரல் தமிழரசன், தீவிர சிகிச்சை மருத்துவர்கள் பரணி மற்றும் விக்னேஷ், மயக்கவியல் மருத்துவர்கள் கார்த்திக் மற்றும் அழகப்பன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அந்த நோயாளி வெற்றிகரமாக சிகிச்சை முடித்து வீடு திரும்புவதில் முக்கிய பங்கு வகித்தனர்.திருச்சி அப்போலோ மருத்துவமனை மூத்த பொது மேலாளர் சாமுவேல் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி சிவம், அப்போலோ மருத்துவமனையின் பிரத்யேக அவசர தொடர்பு எண் 1066 மூலமாக, எந்த அவசர சிகிச்சை தேவைக்கும் பொதுமக்கள் அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார். திருச்சி அப்போலோ மருத்துவமனையின் பொதுமேலாளர் மணிகண்டன், துணை பொது மேலாளர் சங்கீத் உடன் இருந்தார்.