தமிழக தர்காக்கள் பேரவை மற்றும் தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் சார்பில் நபியின் உதய தின விழா திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே உள்ள சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. விழாவை தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் சாஹிப் தலைமையேற்று பேசினார் சிறப்பு அழைப்பாளர்களாக ஹைதர் அலி வக்ஃ போர்டு கண்காணிப்பாளர் (திருச்சி) ஜைனுல் ஆபிதீன் வக்பு ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்கமாக ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்காவில் சிறப்பு ஜியாரத் நடைபெற்றது பிறகு நாகூர் மக்சுத் சாகிப் பைஜி அவர்களின் சிறப்பு பயான் நடைபெற்றது பிறகு பேரவை நிர்வாகிகள் கருத்தரங்க கூட்டமும் நடைபெற்றது விழாவில் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது விழாவில் தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றியவரும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தர்காக்கள் பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நம்முடைய முதல்வர் சிறுபான்மையினரை கட்டிக் காத்து வருகிறார் அதேபோல் தமிழகம் முழுவதிலும் உள்ள நலிவடைந்த சீரமைக்கப்படாமல் உடைந்த நிலையில் உள்ள தர்காக்கள் கண்காணிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதற்காக நிதி உதவி அளிக்க வேண்டும்.
வக்ஃ போர்டு பணிகளை இன்னும் அதிகளவில் சீரமைத்து பாரம்பரியமிக்க மசூதிகள் தர்காக்களை பாதுகாக்க மானியம் அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் மற்றும் நிறுவனர் அல்தாப் உசேன் சாஹிப் பேசினார் மாநில பொதுச் செயலாளர் லியாகத் அலி மற்றும் அரசு டவுன் ஹாஜி திருச்சி ஜலில் சுல்தான் மற்றும் அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்