தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சியில் இன்று நடந்தது. பொருளாளர் ராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்தார். மாநில இணைச்செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார் .கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், மாவட்ட தலைவர் சின்னத்துரை மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42ஆகவும், எருமை பாலுக்கு ரூ.51 ஆகவும் கொள்முதல் விலையைஉயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும்.அல்லது கர்நாடக மாநிலத்தில் உள்ளகூட்டுறவு அமைப்பான நந்தினிக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் அடிப்படையில்கர்நாடக அரசுநிதியிலிருந்து மானியம் அளிப்பதை போலதமிழகத்திலும் வழங்கிஅமைப்புகளை வளப்படுத்திட வேண்டும், ஆவின் பால் கொள் முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை அமல்படுத்திடவேண்டும்.
ஆவினுக்கு பால் வழங்கும் கறவையினங்களுக்கு 50% அடர் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17ந் தேதி முதல் 20 ந் தேதி வரை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன்பாக அண்டை மாவட்ட பால் உற்பத்தியாளர்களுடன் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பாக அறவழியில் கூடி பெருந்திரள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம நடத்துவது.26ம் தேதிக்குள்ளாக அரசு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பிரதிநிதிகளை அழைத்து மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் பால்வளத்துறை அமைச்சருடன் கலந்து பேசி எங்களது கோரிக்கைகள் மீதுஉரிய தீர்வு காணப்படாவிட்டால் வருகிற 28 ந் தேதி தேதிமுதல் தமிழகம் தழுவிய தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்துவதுஎனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.