திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் வயது 45 என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி இருதய வலி காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு இரண்டு இருதய இரத்த குழாயிலும் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் Coronary Artery Bypass Graft ( CABG ) கொரோனரி தமனி பைப்பாஸ் கிராப்ட் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை முதல்வர் டாக்டர் நேரு . மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ,
முதன் முறையாக கொரோனரி தமனி பைப்பாஸ் கிராப்ட் அரசு இந்த ( CABG ) அறுவை சிகிச்சை மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் 13-ம் தேதி அன்று செய்யப்பட்டுள்ளது . அறுவைசிகிச்சையில் நோயாளியின் காலில் இருந்து தமனி எடுத்து அறுவைசிகிச்சையின் மூலம் பெருந்தமனியுடன் இணைத்து அடைப்பு ஏற்பட்ட இருதய இரத்த குழாயுடன் இணைக்கப்பட்டு ( bypass ) . இரண்டு இரத்த குழாய் அடைப்பும் சரிசெய்யப்பட்டது . அறுவை சிகிச்சையை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் மருத்துவர்.குமரவேல் மற்றும் உதவி பேராசிரியர் மருத்துவர்.நந்தகுமார் , மயக்கவியல் துறை மருத்துவர்கள் பேராசிரியர் மருத்துவர்.சுரேஷ் மற்றும் பேராசிரியர் மருத்துவர்.இளங்கோ . உதவி பேராசிரியர் மருத்துவர்.சிவபிரசாத் மற்றும் செவிலியர் சுந்தரி மற்றும் Pump Technician பழனிச்சாமி இனைந்து 3 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக முடித்தனர் .
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறுகையில்:-
இருதயத்தில் இரண்டு இரத்த குழாய் அடைப்பும் சரிசெய்யப்பட்டு .நோயாளி நல்லமுறையில் குணமடைந்து வருகிறார் . இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் 3 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை செலவாகும் . நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்காக 40 படுகைகளும் பெரியவர்களுக்கு 20 படுக்கைகளும் கர்ப்பிணி பெண்களுக்கு 10 படுக்கைகளும் இரவு நேரத்தில் முதுநிலை மற்றும் பட்டதாரி மருத்துவர்கள் நேரடியாக நோயாளிகளை கண்காணித்து வருகின்றனர்.
தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் மேலும் வீட்டை சுற்றி மழை நீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேங்கிய மழை நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றை ஏற்படுத்துகிறது இதனால் பொது மக்கள் தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக இருக்க வேண்டும். 12 இருக்கையில் கொண்ட பேட்டரி கார் நமது அரசு மருத்துவமனை உள்ளது இதன் மூலம் நோயாளிகள் வயதானவர்கள் ஆகியோரை அழைத்து வருவதற்காக இந்த பேட்டரி கார் உள்ளது. பருவ மழை மாற்றம் காரணமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசு மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.