கடலூர் மாவட்டம் விருதாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் கடந்த 6 வருடங்களாக கரும்பு பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு பணத்தை தராமல் நிலுவையில் வைத்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை அடங்கிய மனு அளிப்பதற்கு 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் செல்ல முயன்றனர் ஆனால் விவசாயிகளை கடலூர் செல்ல கூடாது என்று கூறி திருச்சி மாநகர காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை திருச்சி to கரூர் பைபாஸ் சாலை உள்ள அவரது வீட்டு காவலில் வைத்தனர். மேலும் விவசாயிகள் கடலூர் செல்ல வெளியே வந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.