திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை குறித்த போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐ.ஆர்.டி எஸின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமார் ஐயம்பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரன் மற்றும் மேலாண்மை ஆய்வுத் துறை தலைவர் மைக்கேல் பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் இளம் மேலாளர்கள் தங்கள் திறமைகளை அடையாளம் காணவும், ஆய்வு செய்யவும் ஒரு வாய்பை வழங்கியுள்ளது. அதன்படி டிஷ்யூ பேப்பர் கல்லூரி வளாகத்தில் நடந்த திறந்த மேலாண்மை, வணிக வினா விடை போட்டி, வியாபார யுக்தி குறித்த போட்டி, வர்த்தக யுத்தி குறித்த போட்டி மற்றும் வீரர்கள் ஏழாம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கு பெறுவதற்காக தமிழகத்திலிருந்து 22 கல்லூரிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.