கிராமசபை கூட்டம் போல் தமிழகத்தில் முதல் முறையாக நவம்பர் 1-ம் தேதி முதல் நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகராட்சி, 27 வது வார்டு, பட்டாபிராமன் பிள்ளை தெரு, பகுதியில்
இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மேயர் அன்பழகன் தலைமையில் நகர்ப்புறங்களிலும் மக்களின் பங்களிப்பினை உறுதி செய்யும் பொருட்டு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் பேசிய மேயர் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கப் பெறவும், பாதாள சாக்கடை பணிகள் விரைவில் முடிவடைந்து சாலைகள் சரி செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்..
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் 65 வார்டுகளிலும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது…கூட்டத்தில் நகர பொறியாளர் சிவபாதம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் இப்ராகிம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.