திருச்சி மத்திய சிறை சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இந்தோனேஷியா அங்கேரி உள்ளிட்ட 109 பேர் உள்ளனர். அதில் இலங்கைத் தமிழர்கள் 78 பேர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களான இவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு தினமும் உணவுப்படியாக ரூபாய் 175 வழங்கப்படுகிறது. இதைக் வைத்துக் கொண்டு அவர்களே சமைத்துக் சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் 18,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் துணை ஆட்சியர் ஜெமுனா ராணியிடம் இன்று வழங்கினர்.மேலும் சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் கொரோனா நிவாரண நிதி வழங்கிய இலங்கை தமிழர்களின் செயல் பலதரப்பட்ட மக்களையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.