தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி எஸ் எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் மாநில பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில்
கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயம் கண்டித்தது. இந்த வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பிய நேரத்தில் பாசிச சிந்தனை கொண்டவர்கள் இதன் மூலம் மதவாத அரசியல் செய்ய திட்டமிட்டு காவல் துறைக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினர் மேலும் பதட்டத்தை ஏற்படுத்த பந்து அறிவித்தனர். பாசிச சக்திகளின் சதி வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என்பதையும் அதை முறியடிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும், ஆளும் ஒன்றிய அரசு சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்கு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. முஸ்லிம்கள் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்,
அதேபோல் இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது அதன்படி ஹிஜாப் அணிய தடை ஹலால் இறைச்சி தடை ஒலிபெருக்கியில் பாங்கு சொல்லத் தடை போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது முத்தலாக தடைச் சட்டம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கியது என் ஐ ஏ விற்கு சிறப்பு அதிகாரங்கள் பொது சிவில் சட்டம் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும் பாஜக அரசு செய்து வருகிறது. முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் இந்திய நாடு சுதந்திர பெருவதற்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அன்னியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.