தமிழக அரசினால் அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயல்பட்டு வரும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகள் மற்றும் பராமரிப்புகளுடன் மாவட்ட தலைநகரத்தில் இருந்து 100 கி.மீ.க்கு மிகாமல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஒரு நாள் சுற்றுலா செல்ல தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது . அதன்படி இன்று திருச்சி மாவட்ட மையத்திலிருந்து அதிக பட்சம் 20 நபர்கள் என்ற வீதத்தில் 6 மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகள் , குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுடன் தஞ்சாவூர் , பூண்டி மாதா கோவில் மற்றும் கல்லணை ஆகிய இடங்களுக்குச் செல்லும் வகையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்த இன்பச் சுற்றுலாவில் டால்பின் புற உலகு சிந்தனையற்றோாருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் , ஜோசப் கண் மருத்துவமனையின் பார்வைத்திறன் குறைவுடையோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் , ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளி , பிளாசம் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் , விடிவெள்ளி மன வளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் , குடந்தை சேவா சங்கம் காது கேளாதோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட
குழந்தைகள் தஞ்சாவூர் , பூண்டி மாதா கோவில் மற்றும் கல்லணை ஆகிய இடங்களுக்கு செல்ல ரூ .60,000 அரசு செலவில் மூன்று பேருந்துகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வழியனுப்பி வைத்தார் . அதனைத் தொடர்ந்து , மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.