ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பாண்டியராஜன் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் தலைமை காவலர் பரமசிவம் சிவபாலன் மகாராஜன் காவலர் ராஜேஷ் ஆகியோர் தனிப்படை அடங்கிய குழு பழனிசாமி வசிக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அவரிடம் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமி 33 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்த நிலையில் மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள் 15 கோடி ரூபாய்க்கு விலையை இறுதி செய்துள்ளனர்.

அதன்படி கடந்த 7ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சிலையை வாங்குவதற்காக மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் பழனிச்சாமிடம் சிலையை கேட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த 22.800கிலோ எடையுள்ள, 58செமீ உயரமும், 31செமீ அகலமும் உள்ள சிலையை எடுத்து காண்பித்துள்ளார். சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் கூறுகையில் பழனிச்சாமி என்பவர் இந்த சிலையை விற்க முயன்றதும் தெரிய வந்தது. அதேபோல் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து அந்த கோவிலை சேர்ந்த அர்ச்சகர் மூலம் இந்த சிலை விற்பனை செய்வதற்கு சென்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இந்த சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்து அந்த கோவிலுக்கு சொந்தமானது தானா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகு பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறும். உரிய ஆவணங்கள் இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *