சென்னையில் இருந்து கடந்த 12-ம் தேதி 40 என்பீல்டு புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டுனர் சுதாகர் வயது 42 என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட அலுவலக மேலாளர் சென்னை தலைமை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இருசக்கர வாகனங்களை ஏற்றுக்கொண்ட வந்த கண்டெய்னர் லாரி இன்னும் வந்து சேரவில்லை என தகவல் தெரிவித்தார்.
உடனடியாக ஜிபிஆர்எஸ்ஐ கொண்டு பார்த்தபோது கண்டெய்னர் லாரி திருச்சி சிறுகனூர் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை இருசக்கர வாகன மேலாளர்கள் திருச்சி வந்து பார்த்தபோது கண்டெய்னர் லாரி சாவியுடன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது உடனடியாக கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்தனர். அதில் மூன்று புதிய இரு சக்கர வாகனங்கள் மட்டும் திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருடப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களும் திருச்செந்தூர் உடான்குடி பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர் மேலும் இருசக்கர வாகனத்தை திருடிய தூத்துக்குடி சாத்தான் குளத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சுதாகர் அவரது நண்பர்களான தூத்துக்குடி திருச்செந்தூரை சேர்ந்த அருண் வயது 25 மற்றும் சிவசந்திரன் 23 ஆகிய 3- பேர் மீது சிறுகனூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.