திருச்சி சென்னை பைபாஸ் ரோடு , சங்கீதாஸ் ஹோட்டல் அருகில் நின்றுக் கொண்டிருந்த திருநங்கையை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரமறுத்ததால் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளிகள் வீரமணி வயது 22 , நாகராஜ் வயது 24 ஆகியோரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் , குற்றவாளி வீரமணி மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 1 வழக்கும் , திருநங்கையிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்ததாக ஒரு வழக்கு உட்பட குற்றவாளி மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதேபோல் , குற்றவாளி நாகராஜ் மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 1 வழக்கும் , திருநங்கையிடம் செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சி செய்ததாக ஒரு வழக்கும் , பல்வேறு மாவட்டங்களில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 03 வழக்குகள் நிலுவையில் தெரிய வந்தது . எனவே , குற்றவாளிகள் வீரமணி, நாகராஜ் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் , கத்தியை காட்டி பணம் பறிப்பது , பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட குற்றவாளிகள் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல்நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இரு குற்றவாளிகள் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .