தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும் , அச்சங்கங்களுக்கு தேவைப்படும் பால் குவளைகள் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க மான்யமாக தலா ரூ .1 இலட்சம் வழங்கப்பட உள்ளது .

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மகளிர் ஆதிதிராவிட இருத்தல் வேண்டும் வயது வரம்பு 18 முதல் 65 வயதுடைய ஆதிதிராவிட இனத்தை சார்ந்த பெண் பயனாளியான இருக்க வேண்டும் . குடும்ப ஆண்டு வருமானம் ரூ .3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் . விண்ணப்பதாரா தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது . சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் 1 கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும் . மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிட மகளிர்களாக இருப்பின் புதைப்படம் . சாதிச்சான்று , வருமானச்சான்று . குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று , ஆதார் அட்டை , ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுலகம் , தாட்கோ , ராஜா காலனி , மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை , திருச்சிராப்பள்ளி – 620 001. தொலைபேசி எண்.0431-24-3969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . உதவி இயக்குநர் , செய்திமக்கள் தொடர்பு அலுவலகம் , திருச்சிராப்பள்ளி , மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *