சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் பேச்சு பயிற்சி குறித்த கருத்தரங்கம் மற்றும் சமூக வலைத்தள துவக்க விழா திருச்சி சாலை ரோட்டில் உள்ள ஹோட்டல் மாயாஸ் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி 3000 கவர்னர் ஜெரால் மற்றும் இந்திய மெடிக்கல் அசோசியேஷன் முன்னாள் தலைவர் டாக்டர் அசரப் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்று நோயியல் நிபுணர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ் லாரன் ஜெக்டோமிஸ் அசோசியேஷன் செயலாளர் ஷர்ருப்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் செந்தில்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்:-
குரல்வளை புற்றுநோய் கிட்டத்தட்ட 90% புகையிலை மற்றும் புகை பிடித்தல் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. மீதமுள்ள மது, தார், பெயிண்ட் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பொதுவாக ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் 3-6 சதவீதம் குரல்வளை புற்றுநோயாகும். குரல்வளை புற்றுநோயின் பொதுவான அறிகுறி குரல் மாற்றம் ஆகும். பொதுவாக தொண்டை நோய் தொற்றின் காரணமாக குரல் மாற்றம் ஏற்படலாம் இரண்டு வாரங்களுக்கு மேல் குரல் மாற்றம் இருப்பின் குரல்வளை புற்று நோய்க்கான சோதனை மேற்கொள்வது அவசியம் ஆகும் மேலும் குரல்வளை புற்றுநோயின் மற்ற அறிகுறிகள் விளங்குவதில் சிரமம் கழுத்தில் வீக்கம் சுவாசிப்பதில் சிரமம் இரும்பும்போது ரத்தம் வெளியேறுதல் ஆகும். உடனடியாக குரல் மாற்றத்துடன் நோயாளி இருக்கும் போது குரல்வளை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த இயலும்.
மேலும் புற்றுநோயின் தீவிரம் அதிகமாக இருப்பின் குரல் வளையை நீக்குவதே தீர்வு இதனால் நோயாளி பேசும் திறனை இழக்கிறார் இந்நோயாளிகளுக்கு கூட அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சை சிகிச்சை மூலம் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த இயலும். குரல்வளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல்வளை இன்றி பேசுவதற்கு அளிக்கப்படும் பயிற்சியாகும் சில்வர் லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறந்த புற்றுநோய் சிகிச்சையினை வழங்கி வருகிறது திருச்சியில் அதிகபட்ச குரல்வளை அறுவை சிகிச்சை செய்த ஒரே மருத்துவமனை எங்களுடைய மருத்துவமனை ஆகும். பெரும்பாலான குரல்வளை புற்றுநோய் கிட்டத்தட்ட 80 சதவீதம் குணப்படுத்த முடியும். குரல்வளை புற்று நோயாளிகளுக்கு பேச்சு பயிற்சி மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.