திருச்சி மாநகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் காவிரி பாலம் கட்டப்பட்டு ஏறத்தாழ 47 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாலத்தின் சிறத்தன்மை சற்று வலுவிழந்ததால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் ஆனது நடைபெற்று வந்தது. இந்நிலையில் பாலத்தின் தூண்களில் மேல் அதிர்வு தாங்கிகள் பொருத்தம் பணியானது இன்று முதல் தொடங்கி அடுத்த இரு மாதத்திற்கு நடைபெறும் என்பதால் இருசக்கர வாகனங்களுக்கும் தடை செய்யப்பட்டு தற்போது காவிரி பாலம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது.
துறையூர்,முசிறி, மண்ணச்சநல்லூர் லால்குடி போன்ற திருச்சி மாநகரில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த காவிரி பாடத்தை கடந்து தான் திருச்சி மாணவர்களுக்கு வந்து சேர வேண்டும் அந்த வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் காரணமாக பால முற்றிலும் மூடப்பட்டுள்ளதால் சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் நகருக்குள் வரவேண்டிய நிர்பந்தம் உள்ளது – இதன் காரணமாக இன்று காலை ஓயா மேரி சுடுகாடு வழியாக புதிய பாலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி நகருக்குள் நுழைந்து வருகின்றனர்.
இதே போல் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் போன்ற பகுதிகளில் இருந்து நகருக்குள் வருபவர்கள் திருவானைக்காவல் கும்பகோணம் தான் சாலை வழியாக சஞ்சீவி நகரை அடைந்து பின்னர் மீண்டும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக நகருக்குள் நுழைய அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.