தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக கிராமிய கலைக் குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக எச்.ஐ.வியுடன் “வாழ்வோரும் நம்மில் ஒருவரே” என்கிற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஆட்டோவில் ஒட்டினார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் துவங்கி காஜா மலை மெயின்ரோடு, மன்னார்புரம் ரவுண்டானா, டிவிஎஸ் டோல்கேட் வழியாக திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சென்று அடைந்தது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் இணை இயக்குனர் ( சுகாதாரப் பணிகள்) லட்சுமி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள்,
ஆலோசகர்கள் மற்றும் சமூக பணியாளர்கள் கலந்து கொண்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு பேரணியாக சென்றனர்.