தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் வெங்கட்ராமன் பேட்டியளித்தார்:-
பசுமை புரட்சி என்ற பெயரால் வலியுறுத்தப்பட்ட ரசாயன வேளாண்மை மண்ணை மலடாக்கி அதிக நீர் தேவை உள்ள இயற்கை சீற்றங்களை தாக்கு பிடிக்காத நோஞ்சான் விதைகளை பரப்பியதால் சுற்றுச்சூழல் கேட்டதோடு தொடர்ந்து அதிகரித்து வரும் இடுபொருள் செலவால் உழவர்கள் கடனாளி ஆகின்றனர். ரசாயன வேளாண்மைக்கு வழங்கும் ஏக்கருக்கு சுமார் 5000 ரூபாய் மானியத்தை மரபு வேளாண்மை உழவர்களுக்கு வழங்க வேண்டும் ரசாயனம் இல்லாத வேளாண்மையில் விளையும் விலை பொருட்களுக்கு சிறப்பு விலை வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசு விடுதிகள் மருத்துவமனைகள் சிறைச்சாலை போன்றவற்றில் ரசாயனம் இல்லாத இயற்கை வழி உயிர்ம வேளாண்மை விளை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் உயிர்ம வேளாண் விளைபொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழர் மரபு வேளாண்மை கூட்டு இயக்கம் சார்பில்
நாளை மறுநாள் (28ம் தேதி) திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் – தமிழர் மரபு வேளாண்மை கூட்டியக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கரும்பு கண்ணதாசன் நடராஜன் விஜய் விக்ரமன் சுரேஷ்குமார் கருப்பையா மற்றும் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.