தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு சார்பில் திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் கலந்துகொண்டு மருத்துவ கண்காட்சியை தொடங்கி வைத்தார்..
இந்த மருத்துவ கண்காட்சியில் அரிய வகை மூலிகைகள், மருத்துவ உபகரணங்கள், ஆயுர்வேத சிகிச்சை முறை மருந்துகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ரத்த சுத்திகரிப்பு, தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு கோளாறுகள், சிறுநீர் தொற்று, நீரிழிவு நோய் போன்ற நோய்களுக்கு ஆயுர்வேத மருந்துகளான பூந்திக்கொட்டை, சரக்கொன்றை, முன்னை வே.குங்கிலியம், அகில் கட்டை, கழற்சிக்காய் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை ஆயுர்வேத மருந்துகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இதில் ஏராளமான பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். மேலும் இம்முகாமில் ஆயுர்வேத மாநிலத் தலைவர் பிரேம் வேல், திருச்சி மண்டல தலைவர் டாக்டர் கிரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.