திருச்சி தீரன் நகரில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்குள்ள பாரதியார் மக்கள் நல சங்கம் சார்பாக முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் சந்திப்புகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 17 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜீயபுரம் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் உதயகுமார், நாச்சி குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.