திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஹபீபுர் ரகுமான், துணைத் தலைவர் உதுமான் அலி ஆகியோர் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் என் ஐ ஏ மற்றும் காவல் துறையின் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுகிறார்கள்.தவறான செய்திகளை தந்து அவர்கள் கைது செய்யப்படுவதால் இஸ்லாமிய சமூக மக்களிடையே ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது சமூகத்தில் இருந்து இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் நிகழ்வாகவே இது இருக்கிறது. இதனால் இஸ்லாமிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒருவேளை இஸ்லாமிய இளைஞர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை முறையாக கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் தெரிவித்தால் நாங்களே விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்.
ஆகவே இஸ்லாமிய இளைஞர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது எஸ் டி பி ஐ நிர்வாகி இமாம் ஹசன், மஜ்லிஸ் கட்சி மாநில செயலாளர் முகமது இக்பால், எம் ஜே கே மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் ,ஐ எம் எம் கே மாவட்ட செயலாளர் முபாரக் அலி, ஹாஜ மொய்தீன், ஷேக் இப்ராஹிம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.