திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியை மொராய்ஸ்சிட்டி உரிமையாளர் லெரொன் மொராய்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்..
ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது. மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 15,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 10,000 ரூபாய், 3ம் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது..போட்டியில் 3,000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.